கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதில் ராஜீவ் காந்தி பெயர் நீக்கம் ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது’ என்று மாற்றம் (பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு)

டெல்லி. ஆக.07
விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனிமேல் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்துள்ளார்.
விளையாட்டு துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது கேல் ரத்னா விருது. இது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரையட்டி, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என்று வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் அது, முன்னாள் ஹாக்கி ஜாம்பவான் வீரரான தயான் சந்த் பெயரில், தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் அழைக்கப்படும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், அறிவித்திருக்கிறார்.
இந்திய ஹாக்கி விளையாட்டு வீரரான தயான் சந்த், 1926 முதல் 1949 வரை 185 சர்வதேச ஆட்டங்களில் 570 கோல்கள் அடித்தார். இவர் பங்கேற்ற மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது என்பது சிறப்பம்சமாகும். தயான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29, இந்தியாவில் தேசிய விளையாட்டுத் தினமாகக் கொண்டாட்டப்பட்டு வருகிறது.
தயான் சந்த்துக்கு பாரத
ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தொடர்ந்து
பல வருடங்களாக கோரிக்கை வலுத்து வரு
கிறது. கிரிக்கெட்டை தாண்டி மற்ற விளையாட்டு
களை சேர்ந்தவர்களுக்கு இது போன்ற பெரிய
மரியாதை கிடைக்க
வில்லை, அவருக்கு உரிய கவுரவம் தரப்படவில்லை என்று பேச்சுக்கள் உண்டு.
ஆனால் தயான் சந்த் பெயரில் டெல்லியில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு அவருக்கு மரியாதை செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் தேசிய விளையாட்டாக இருப்பது ஹாக்கி. ஆனால் பல காலங்களாக போதிய முக்கியத்துவம் இல்லாமல் இருந்து வந்தது. இப்போது, அதற்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் இந்த முறை பல்வேறு முக்கிய பந்தயங்களில் வெற்றி பெற்றது. வெங்கல பதக்கத்தையும் வென்றது. 41 வருடங்களுக்கு பிறகு இது ஒரு பெரிய சாதனையாகும்.
எனவே ஹாக்கிக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில்
தான் இந்த முக்கிய அறிவிப்பு நேற்று வெளி
யிடப்பட்டுள்ளது. நரேந்திர மோடியே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
விளையாட்டு துறையில் மிகவும் சிறப்பான முறையிலே செயல்படுபவர்களுக்கு கேல் ரத்னா விருது அளிக்கப்படுகிறது. குறிப்பாக தேசிய சாம்பியன் பட்டம் பெறுபவர்கள், காமன்வெல்த் போட்டி, உலக கோப்பை போட்டி, ஒலிம்பிக் போன்ற முக்கியமான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்திய விளையாட்டுத் துறைக்கு மிகச் சிறந்த முறையில் பங்களித்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
மிகவும் முக்கியமான ஒரு விருந்துக்கு தயான் சந்த் பெயரை சூட்டி அதன்மூலம் ஹாக்கி விளையாட்டு முக்கியத்துவத்தை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.