கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

அடிப்படை வசதிகள் இல்லாத அரும்பனூர் ஊராட்சி முறைகேடுகளின் புகழிடமாக திகழ்வதாக பொதுமக்கள் புகார்

மதுரை. அக்.22.
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அரும்பனூர் ஊராட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி பொதுமக்கள் வாழ்கின்றனர்.
தொற்றுநோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது.மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது அரும்பனூர் ஊராட்சி. இங்கு அரசு நிதிமுறையாக செலவிடாமல் வீணடிப்பதாகவும், பல வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
அரும்பனூர் கிராமத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி பொதுமக்கள் வசிக்கின்றனர். தெருக்கள் முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. வீதிகளில் சாக்கடை நீர்பெருக் கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதார கேடு நிலவுகிறது. கொரோனா, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அரும்பனூர் பொதுமக்கள் கூறுகையில், அடிப்படை வசதிகள் எதும் இன்றி வாழ்கிறோம். சாக்கடை நீர் தெருவில் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சுடுகாடுக்கு செல்லும் பாதை கூட சீரமைக்கப்படவில்லை. அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் நிதி முறையாக செலவு செய்யப்படுவதில்லை.
அங்கன்வாடி கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது. அதிகாரிகளிடம் அடிப்படை வசதிகள் கோரியும், முறைகேடுகள் குறித்தும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றனர்.
அரும்பனூர் ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளில் போதிய நிதி ஒதுக்கீடு செய்ததாகவும் ஆனால் வேலைகள் முறையாக நடக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதைபோல அரும்பனூரில் தோண்டத் தோண்ட ஊழல்கள் கிளம்பும் என்கின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.