பரமக்குடி, நவ.27
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணி நகர் பகுதியில் வசிக்கும் ரமேஷ் கண்ணன் பாக்கியலட்சுமி தம்பதியரின் மகன் முகிலன்(14)தனது சைக்கிளில் மணி நகரில் இருந்து தனது வீட்டிற்கு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்ப்புறமாக மதுரையிலிருந்து பரமக்குடி நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி முகிலனின் சைக்கிளில் மோதி 20 மீட்டர் தூரத்திற்கு சாலையில் இழுத்துச் சென்றது.
இதில் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் முகிலன் உயிரிழந்தார். பின் தகவலறிந்த பரமக்குடி டி.எஸ்.பி. வேல்முருகன் விபத்து குறித்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு முகிலனின் உடலை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர்.
நகர்ப் பகுதிகளில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன எனவே இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
