கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் கன்னிப் பேச்சு தி.மு.க. உறுப்பினர்கள் மேசையை தட்டி உற்சாகம்

சென்னை, ஆக.19
முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி நேற்று சட்டசபையில் தனது கன்னிப்பேச்சை தொடங்கினார். அதன் விவரம் வருமாறு:
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மூவரையும் வணங்கி என்னுடைய கன்னிப் பேச்சை இந்த அவையில் பதிவு செய்கிறேன் என்று திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் தனது முதல் உரையை இன்று ஆற்றியிருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க சார்பில் நேற்று (18.-08.-2021) உதயநிதி பேசினார். முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி யிருப்பதால், அவருடைய கன்னிப்பேச்சாக இந்த உரை அமைந்தது. பேச்சின் தொடக்கத்திலேயே தி.மு.க-வின் மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் என அனைவ ரையும் குறிப்பிட்டு நன்றி சொன்னது தி.மு.க-வினருக்கு ஆச்சர்யத்தை அளித்தது. உதயநிதியின் நெருங்கிய நண்பர் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ§க்கு நன்றி சொல்லும்போதுமுத்தமிழறிஞர் காலத்தில் அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி மாமா, அவருக்குப் பிறகு இன்று என்னுடைய நண்பனாக தோளோடு தோள் நிற்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என உதயநிதி பேச அவருக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த அன்பில் மகேஷ் பூரிப்பூடன் உதயநிதியைத் திரும்பிப் பார்த்தார்.
நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று பேச்சின் தொடக் கத்திலேயே உதயநிதி குறிப்பிட்டார். அதேபோல் மறைந்த பேராசிரியர் அன்பழகனைத் தனது பேச்சில் சுட்டிக்காட்டும் போது `பேராசிரியர் தாத்தா என்றே அன்பழகனைக் குறிப்பிட்டார் உதயநிதி. நீதிக்கட்சியில் தொடங்கி தி.மு.க வரை வரிசையாக உதயநிதி பட்டியலிட தி.மு.க-வினர் மேசையைத் தட்டி அந்தப் பேச்சை உற்சாகப்படுத்தினார்கள். உதயநிதியின் பேச்சின் தொடக்கம் முழுவதும் அரசையும், அவரது தந்தையின் ஆட்சியைப் பற்றியுமே இருந்தது. குறிப்பாக திராவிட மாடல் அரசின் `மாண்புமிகு முதல்வர்’ என்று ஸ்டாலினைப் புகழ்ந்து தள்ளினார். அதன் தொடர்ச்சியாக நூறு நாள்களில் தி.மு.க அரசு மேற்கொண்ட அனைத்துத் திட்டங்களையும் வரிசையாகப் பட்டியலிட்டார். உதயநிதியின் பேச்சுக்கு தி.மு.க உறுப்பினர்கள் மேசையைத் தட்டி அடிக்கடி உற்சாகப்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து,நீட் தேர்வு தமிழ்நாட்டின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. இதுவரை 14 மாணவ- மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணமும் நீட் தேர்வை ரத்து செய்வதுதான். இதை தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தோம். இப்போது எதிர்க்கட்சிகள் நீட் தேர்வு குறித்த உங்கள் வாக்குறுதி என்ன ஆனது என்று கேட்கிறார்கள். இதற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். அ.தி.மு.க அரசு நீட் தேர்வை தடுத்திருக்க வேண்டும். அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. மாண்புமிகு தமிழக முதல்வர் நீட் ஒழிப்பின் முதல்படியாக முன்னாள் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து கருத்துகளைக் கேட்டு, அறிக்கை பெறப்பட்டுள்ளது. நீட் தேர்வு ரத்தை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.