கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் (நேர்காணலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறவிப்பு)

சென்னை, மார்ச்.05
பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத வர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் தேர்வு நேர்காணலில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டி
யிடு வதற்காக 7ஆயிரத்து 967 விருப்பமனுக்கள் அளிக்கப்
பட் டுள்ளன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்
பாடி பழனிசாமி, அவைத்தலைவர், துணை ஒருங் கிணைப்பாளர் உள்ளிட்டோர் இந்த நேர்காணலை நடத்தினர்.
விருப்பமனு தாக்கல் செய்த அனைவரிடமும் நேற்று ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்பட்டது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முதல்
கட்ட மாகவும், பிற்பகல் 3 மணி முதல் இரவு வரை 2ம் கட்டமாகவும் நேர்காணல் நடைபெற்றது.
நேர்க்காணலின் போது பேசிய, எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தங்களை வேட்பாளர்களாக நினைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் பேரவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம் எனவும், உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.