கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்

டெல்லி, மார்ச்.07
14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்க இருப்பதாகவும், அதன் இறுதிப் போட்டி மே 30ம் தேதி நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சம்மரை மேலும் சூடேற்றும் வகையில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஐபிஎல் தொடரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ளது. இருப்பினும் ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதியானது அறிவிக்கப்படாமல் உள்ளது.
தேர்தல், தேர்வு அட்டவணை போன்றவற்றை கணக்கிட்டு ஐபிஎல் அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
இதனிடையே 14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கும் எனவும் அதன் இறுதிப் போட்டி மே மாதம் 30ம் தேதியன்று நடைபெறும் எனவும் தெரியவந்துள்ளது. ஐபிஎல் அட்டவணையை இறுதி செய்வதற்காக ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் அடுத்த வாரம் கூட்டப்பட உள்ளது.
இதில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்கள் குறித்தும் முடிவெடுகப்பட உள்ளது.
இது தொடர்பாக ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுவில் உள்ள பெயர் கூற விரும்பாத உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெறும் தேதி இன்னும் முடிவாகவில்லை, இருப்பினும் அடுத்த வாரத்தில் இந்த கூட்டம் கூட்டப்படும்.
இதுவரை உறுதியாகாத நிலையில் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி மே 30 வரை நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
முதலில் ஐபிஎல் தொடரை ஒரே ஊரில் நடத்தலாம் என திட்டமிடப்பட்டது, தற்போது 4 முதல் 5 நகரங்களில் போட்டிகளை நடத்தலாமா என ஆலோசனையில் உள்ளோம். இது குறித்து மூத்த உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையில் உள்ளதாக தெரிவித்தார்.
சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் வாய்ப்புள்ள நகரங்களாக உள்ளன.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.