கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

“ஒரே கட்டமாக தேர்தல்… 2 நாளில் வாக்கு எண்ணிக்கைக்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை!” – சுனில் அரோரா

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். அடுத்த 2 நாளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜிவ் குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவினர் நேற்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும், தமிழக தேர்தல் அதிகாரி, கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்று வருமான வரித்துறை , ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர்.

அதன் பின்னர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தமிழக தலைமை செயலர், உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினோம். ஏற்கனவே நேற்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகின்ற மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய வாக்காளர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ஓட்டுப்போட ஏதுவாக வசதிகள் செய்யப்படும். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கொரோனா காலத்தில் ஓட்டுப்போட கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்படும். சமூக இடைவெளியை பின்பற்றி ஓட்டுப்போட நடவடிக்கை எடுக்கப்படும். சென்னைக்கு இரண்டு சிறப்பு செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு முறையை சில கட்சிகள் வரவேற்றுள்ளன.

வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களே தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்படுவார்கள். சட்டம் ஒழுங்கை பார்வையிட மத்திய அரசு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். மத்திய அரசு அதிகாரிகள் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள். பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படையினர் கூடுதலாக வரவழைக்கப்படுவார்கள். எப்போது போல், வரும் தேர்தலிலும் தமிழகத்தில் அதிகளவு ஓட்டு பதிவாகும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.