கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நடைமுறைக்கு வந்தது! (முதல்வர் மு.க.ஸ்டாலின் 58 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்)

சென்னை, ஆக.15
வேதம், நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆழ்வார்
பாசுரங்கள் உள்ளிட்டவற்றில் 6 முதல் 7 ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த பட்டாச்சார்யர்களுக்கான பணி நியமன ஆணை
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் ஆலய அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட 216 பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் படித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 பேர்களுக்கு இந்த பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
சென்னை பசுமை வழிச்சாலை கபாலீசுவரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் மொழியின் பஞ்ச புராணங்கள் என்று போற்றப்படும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பல்லாண்டு, திருவிசைப்பாவுடன் வேதப்
பாடங்கள், வேத ஆகமங்களை பயின்றவர்களுக்கு சிவாலயங்களில் அர்ச்சகர் ஆவதற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வேதம், நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆழ்வார் பாசுரங்கள் உள்ளிட்டவற்றில் 6 முதல் 7 ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த பட்டாச்சார்யர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அம்மன் கோயில்களில் பூசாரி
களாக பணி செய்ய உள்ளோருக்கான பணி ஆணையும் வழங்கப்பட்டது.
மேலும் கோவிலில் ஓதுபவர்கள், நந்தவன பராமரிப்பாளர்கள், கோயில் காவலர்கள், மாலை கட்டுவோர், அர்ச்சனை சீட்டு விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மிகச் சொற்பொழி
வாளர் சுகி.சிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய பொன்னம்பல அடிகளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதிபோலவே கடவுளை ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ, கடவுளும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் செயல்படுவதாக புகழாராம் சூட்டினார்.
1970 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது.
சட்டம் வந்து 51 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் தமிழக வரலாற்றிலே முதன் முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை நடைமுறைக்கு வந்தது.