கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

வேளாண் மசோதாவை எதிர்த்து அமளி 8 எம்.பி.க்கள் சஸ்பெண்டு! (மாநிலங்களவையில் பரபரப்பு)

சென்னை, செப்.22&
விவசாய மசோ
தாக்கள் தாக்கலின் போது
அவையில் அநாகரீ
கமாக நடந்து கொண்ட
எம்.பிக்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்
பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்
காலக் கூட்டத்தொட
ரில் இருஅவைகளிலும் மூன்று விவசாய மசோ
தாக்கள் தாக்கல் செய்யப்
பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளன.
இதன் மீதான விவா
தத்தின் போது மாநிலங்
களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நேற்று அமளி
யில் ஈடுபட்டனர். மேலும் துணைத்தலைவர் ஹரி
வன்ஸ் மீது நம்பிக்கை
யில்லா தீர்மானத்தையும் அளித்தனர். பின்னர்
மாநிலங்களவை நேற்று காலை ஒத்திவைக்
கப்பட்டது. ஆனால் அவைக்குள் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
நிலவியது. இந்நிலையில் நேற்று காலை மாநிலங்
களவை கூடியதும், நேற்று விவசாய மசோதாக்கள் மீதான விவாதத்தின் போது அவையில் அமளியில் ஈடுபட்ட எம்.பிக்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக
எம்.பிக்கள் அவைத்த
லைவரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, நேற்று அவைக்கு மிக மோசமான நாளாக அமைந்துவிட்டது. துணைத்தலைவர் அச்சு
றுத்தப்பட்டுள்ளார். அவரது
பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இது முற்றி
லும் எதிர்பாராத ஒன்று. கண்டிக்கத்தக்க நிகழ்வு.
சம்பந்தப்பட்ட எம்.பிக்கள் அனைவரும் சுய பரி
சோதனை செய்து கொள்
ளுங்கள் என்று கூறினார்.
அப்போது தொடர்ந்து குரலெழுப்பி வந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டெரிக்
ஓ பிரையனை வெளியேற வேண்டும் என்று வெங்
கையா நாயுடு உத்தர
விட்டார். மேலும் விதி
முறைகளின் படி துணைத்
தலைவர் ஹரிவன்ஸ§க்கு எதிராக அளித்த நம்பிக்
கையில்லா தீர்மானம் ஏற்கக்கூடியது அல்ல
என்றும் உத்தரவிட்
டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அவை நடவடிக்கைகளுக்கு குந்
தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட
8 எம்.பிக்கள் ஒரு வாரத்
திற்கு சஸ்பெண்ட் செய்யப்
படுவதாக உத்தரவு பிறப்
பித்தார். அவர்கள் டெரிக்
ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சாதவ், கே.கே.
ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையது நாசிர் ஹ§சைன், இள
மாறன் கரீம் ஆகியோர் ஆவர். இதற்கிடையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்
டதால் அவை நடவடிக்
கைகள் 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் தொடங்கியதும், சஸ்
பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் அவை நடவடிக்
கைகளில் பங்கேற்க வேண்டாம் என்று துணைத்
தலைவர் ஹரிவன்ஸ் தெரிவித்தார். ஆனால்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்
டதால் அவை 10.36
மணிக்கு தள்ளிவைக்
கப்பட்டது. இதையடுத்து அவை தொடங்கியது. ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வந்தனர். விவசாய மசோதாக்கள், சஸ்பெண்ட் உத்தரவு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் மேலும் 30 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.