கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இந்திய அளவில் சாதித்த தமிழகம்! (கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 8-வது இடத்திற்கு நகர்வு)

சென்னை, நவ.02
இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 8-வது இடத்துக்கு நகர்ந்திருக்கிறது தமிழகம்
கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் 2-வது இடத்தில் இருந்து வந்தது தமிழகம். ஆனால் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பொதுவாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவேகமாக குறைந்
திருக்கிறது.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,164 பேர் மட்டுமே. இது இந்திய அளவில் 8-வது இடம். தமிழகத்தைவிட மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், டெல்லி, ஆந்திரா, உத்தரப்பிர
தேசத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறு
வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்திய அளவில் மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,78,406. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,24,522 ஆக இருக்கிறது. இது இந்திய அளவில் 4-வது இடம்.கொரோனா மரணங்களில் 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்
போது 3-வது இடத்தில் உள்ளது. கொரோனா மரணங்களில் மகா
ராஷ்டிரா முதலிடத்திலும் 2-வதாக கர்நாடகாவும் உள்ளன.
மகாராஷ்டிராவில் 43,911, கர்நாடகாவில் 11,168, தமிழகத்தில் 11,122 பேர் கொரோனாவால் மரணமடைந்து உள்ளனர்.