கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடரும்! தமிழக சட்டசபை தேர்தலில்… அமித்ஷா முன்னிலையில் உறுதி)

சென்னை, நவ.22
அ.தி.மு.க.&பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று அமித்ஷா முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இனிவரும் தேர்தல்களில் அ.தி.மு.க.&-பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று உறுதிபட ஓ.பன்னீர்செல்ம் கூறி உள்ளதுடன், “நவீன காலத்தின் சாணக்கியர் அமித்ஷா” என்று பேசியது மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.
கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சென்னை வந்திருந்தார்.
ஏர்போர்ட்டில் அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர். பின்னர், ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
ரூ.900 கோடியில் வல்லூரில் இந்தியன் ஆயில் பெட்ரோலிய முனையத்துக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
இதைதவிர, ரூ.1400 கோடியில் அமுல்லைவாயிலில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், அ.தி.மு.க.&பா.ஜ.க. கூட்டணி தற்போது மீண்டும் உறுதியாகி உள்ளது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியை தொடர்வதா, அமித்ஷாவிடம் என்ன பேசுவது என்பது தொடர்பாக சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடந்தது. மேலும், தொகுதிகள், சீட் விவகாரம் குறித்து, அமித்ஷா பேசினார்.
அதற்கு என்ன பேசுவது என்றும் மா.செக்களிடம் கருத்துகளை முதல்வர், துணை முதல்வர் கேட்டறிந்ததாகவும் சொல்லப்பட்ட நிலையில், தற்போது இரு கட்சிகளின் கூட்டணி உறுதியாகி உள்ளது.இந்த விழாவில், அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்
என்று அமித்ஷா முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இனிவரும் தேர்தல்களில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட கூறியுள்ளார்.
ஒரு அரசு விழாவில் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளதும், “நவீன காலத்தின் சாணக்கியர் அமித்ஷா” என்று ஓ.பன்னீர் செல்வம் பேசியது மேலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதை தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை தேர்தலில் அமைக்கப்பட்ட பா.ஜ.க.வு
டனான அ.தி.மு.க. கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என அமித்ஷா முன்னி
லையில் தெரிவித்தார்.