கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

7-வது பொதுமுடக்கம் நாளை நிறைவு! (கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை)

சென்னை, ஆக.30&
தமிழகத்தில் நாளை
யுடன் பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது மற்றும் என்னென்ன சேவைகளை மீண்டும் தொடங்கலாம் என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
முதலில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில்
மருத்துவக் குழுவி
னருடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்
கிறது. ஆரம்ப கட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்ததால், மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்
பட்டது.
அதன் பிறகு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வு
களுடன் கூடிய பொது
முடக்கம் அமலானது. இருப்பினும் மக்கள் தங்களை காத்துக் கொள்ள வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்
தப்பட்டனர்.
தற்போது அமலில் இருக்கும் 7 ஆம் கட்ட தளர்வுடன் கூடிய பொதுமுடக்கம் கடந்த மாதம் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இது நாளையுடன் முடிவடைய உள்ளதால் நேற்று மாவட்ட ஆட்சியர்
களுடன் முதல்வர் ஆலோனை மேற்கொண்
டார். ஊரடங்கை நீட்டிக்
கலாமா? வேண்டாமா என்பது குறித்து காலை 10.30 மணியில் இருந்து நடைபெற்று வந்த ஆலோ
சனை 4 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.
இதனைத்தொடர்ந்து முதல்வர் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடை
பெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, இ- பாஸ், பொது போக்குவரத்து சேவை, கல்வி நிறுவனங்கள், பொருளாதாரம் உள்ளிட்
டவை குறித்து முதல்வர் ஆலோசித்தார் எனக் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை
யில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக சுகா
தாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகா
தாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்
றனர். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அடுத்தடுத்து ஊரடங்கு வீதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஏழாம்
கட்ட ஊரடங்கு முடி
வடைய உள்ளது. அடுத்த
மாதம் (செப்டம்பர் 1)
முதல் 8 ஆம் கட்ட ஊர
டங்கு அமல் செய்யப்
படும் எனவும், அதில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படவுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.