கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அடக்கம்

சென்னை, செப்.27
மறைந்த பின்னணி பாடகர்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல், சென்னைக்கு அருகே
யுள்ள, செங்குன்றம் பண்ணை வீட்டில் நேற்று நண்பகல், நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு போலீசாரின் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
“பாடும் நிலா” என ரசிகர்
களால் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கொரோனா தொற்றுக்காக
சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
50 நாட்களுக்கு மேலாக,
சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம்
அவருக்குஉடல்நிலை மோசம
டைந்து உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் நுங்கம்பாக்கத்தில உள்ள அவரது வீட்டிற்கு
கொண்டு செல்லப்
பட்டது.
அங்கு அவரது உடலுக்கு
பொதுமக்கள் அசலி
செலுத்தினர். இதையடுத்து
கூட்டம் அதிகரித்ததன் கார
ணமாக அவரது உடல்
செங்குன்றத்தில் உள்ள
தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது.
பண்ணை வீட்டில் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி
யில்லை என அறிவிக்க
பட்டது. எனினும் அவரது உடல் வந்தவுடன் ஏராளமா
னோர் குவிந்தனர். இதை
யடுத்து அதிகாலை முதல்
பொதுமக்கள் அசலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்
களுக்கு சானிடைசர் வழங்கி சமூக விலகலுடன் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்
பட்டது. பண்ணை வீட்டில்
மாந்தோப்புக்கு மத்தியில்
அவரது உடலை நல்ல
டக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது.
அமைச்சர் மா.பா.பாண்டிய
ராஜன், திரைப்பிரபலங்கள், விஜய், அர்ஜுன், மனோ,
வெங்கட் பிரபு, பிரேம்ஜி, பாரதிராஜா, மயில்சாமி உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
எஸ்பிபி உடலுக்கு, அவரின் குடும்ப வழக்கப்
படி இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. சடங்கு
களை மகன் எஸ்பிபி சரண் செய்தார். இதையடுத்து ஆயுதப்படை போலீஸ் துணை ஆணையர் திரு
வேங்கடம் தலைமையில், போலீஸாரின் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 24 போலீ
சார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு மரியாதை அளித்தனர்.
முன்னதாக திரை
யுலகில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரச மரியாதையுடன் நல்ல
டக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது எஸ்பிபியை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல, கர்நாடக அரசும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.