கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டம் அரசிதழில் வெளியீடு!

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இடஒதுக்கீடு வழங்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பலகட்ட வலியுறுத்தல்களுக்கு பின் அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

அதையடுத்து அந்த மசோதா சட்ட வடிவம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளத்உ.