கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் 6 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று பாதிப்பு! (குணமடைந்தோர் எண்ணிக்கை 5.19 லட்சம்)

சென்னை, செப்.27
தமிழகத்தில் ஒரே நாளில் 5,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,75,017 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முன்பை விட கொரோனா தொற்று சற்று குறைந்திருந்தாலும் நாள்தோறும் பாதிப்பு கணிசமாக பதிவாகி வருகிறது. நேற்று ஒரே
நாளில் 5,647 பேருக்கு புதிகாக நோய் தொற்று ஏற்
பட்டுள்ளது. இதனை
யடுத்து இதுவரை பாதிக்கப்
பட்டோரின் எண்ணிக்கை 5,75,017 ஆக அதிகரித்
துள்ளது.
சென்னையில் மட்டும்
நேற்று 1187 பேர் கொரோ
னாவிற்கு பாதிக்கப்பட்
டுள்ளனர். சென்னை தவிர்த்து 19 மாவட்டங்களில் மட்டுமே நேற்று 3,545 பேர் கொரோனா உறுதி செய்யப்
பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது என்றாலும் தினசரியும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் நேற்று 5,75,017 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,19,448 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 5,612 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று கொரோனாவிற்கு 1187 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,62,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரம் பேருக்கு கீழ் பதிவாகி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
கோவையில் நேற்று 656 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் சென்னையை அடுத்து
கோவை 2ம் இடத்தில் உள்ளது. பல மாவட்டங்
களில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சேலம் – 296, செங்கல்பட்டு – 259, திருவள்ளூர் – 235, கடலூர் – 212, திருப்பூர் – 118, தஞ்சை – 179, விழுப்புரம் – 161, காஞ்சிபுரம் – 148, நீலகிரி – 145, திருவாரூர் – 141, ஈரோடு – 140, வேலூர் – 138, திருவண்ணாமலை – 136, நாமக்கல் – 134. திருச்சி, கன்னியா
குமரியில் தலா 96 பேருக்கும் தருமபுரியில் 95 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நெல்லையில் 90 பேர் நேற்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.