6 மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை! (புரெவி புயல் கரைகடப்பதன் எதிரொலி மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுரை)

சென்னை, டிச.04
புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தமிழ
கத்தில் 6 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. புரெவி புயல்எதிரொலியாக தென்
மாவட்டங் களில் பலத்த காற்றுடன் கூடிய கன
மழை பெய்யும்என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி ராமநாதபுரம் விருதுநகர் மற்றும் தூத்
துக்குடி மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் அந்த மாவட்டங்களில் அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புரெவிபுயல் காரணமாக தென் தமிழ
கத்தில் பலத்த காற்றுடன் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
புரெவி புயலின் தாக்கத்தினால் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. como tomar ivermectina para piojos புரேவி புயல்
இலங்கையில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக பாம்
பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கொட்டித் தீர்க்கும் கனமழையைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தயார் நிலையில் 209 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தாழ்வான பகுதிகளைக் கண்ட
றிந்து முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டு
மென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புரேவி புயல் தமிழக தென் கடலோரத்தில் கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையில் இன்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புரவி புயல் கரையைக் கடக்கும்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்
குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகியவற்றில் கன மழை பொழிய வாய்ப்பிருப்பதாகவும், கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கணித் துள்ளது.