கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

‘54ஆவது அரை சதம்’ மிதாலி ராஜை தவிர வேறு எந்த வீராங்கனையும் 50-ஐ கூட தொடவில்லை

டெல்லி, மார்ச்.08
தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய பெண்கள் அணி.
இந்தியா – தென்னாப்பிரிக்க பெண்கள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 1 ரன்னிலும், ஸ்மிரிதி மந்தனா 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து நிதானமாக விளையாடிய இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் 85 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என மொத்தம் 50 ரன்கள் அடித்தார்.
இது அவருக்கு 54 ஆவது ஒரு நாள் அரை சதமாகும்.
மிதாலி ராஜைத் தவிர வேறு எந்த ஒரு வீராங்கனையும் ஒரு நாள் போட்டிகளில் 50 அரை சதங்களுக்கு மேல் அடித்ததில்லை. மிதாலி ராஜுக்கு பிறகு இரண்டாவது இடத்தில் இருப்பது இங்கிலாந்து அணியின் எட்வர்ட்ஸ்
ஒரு நாள் போட்டியில் அதிக அரை சதங்கள் (பெண்கள்)
1) மிதாலி ராஜ் – 54, 2) சார்லோட் எட்வர்ட்ஸ் – 46, 3) ஸ்டாஃபனி டெய்லர் – 36, 4) டெப்பி ஹாக்லி – 34, 5) கரேன் ரோல்டன் – 33, இதையடுத்து ஹர்மன்பிரீத் கவுர் 40 ரன்கள் அடித்தார். இறுதியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் அடித்தது.