கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

50 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

சென்னை, ஜூலை.31
50 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 34 கோடியே 78 லட்சத்து 88 ஆயிரத்து 950 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி
களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.சென்னை ராயப்
பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில் தமிழ்நாடு அமைப்பு சாரா
தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் நடந்த விழாவில் முதல்வர்இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்
களில் பதிவு செய்துள்ள 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 10 கோடியே 69 லட்சத்து 86 ஆயிரத்து 950 ரூபாய்க்கான திருமண
நிதி உதவி, மகப்பேறு நிதி உதவி, கல்வி உதவி தொகை, கண்
கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் ஓய்வூதிய நிலுவைத் தொகை
யாக 24 கோடியே 9 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் என 34 கோடியே 78 லட்சத்து 88 ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் முதல்வர் வழங்கினார்.
இதுகுறித்து முதல்வர், 50,000 அமைப்புசாராத் ழிலாளர்களுக்கு திருமணம், மகப்பேறு & கல்வி உதவித்தொகை, ஓய்வூதியத்
தொகை உள்ளிட்ட ரூ.34கோடிக்கும் அதிகமான மதிப்பி
லான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். கலைஞர் வழி நடக்கும் கழக அரசு உடலுழைப்புத் தொழிலா
ளர்கள்- அமைப்புசாராத் தொழிலாளர்களை என்றும் அரவ
ணைத்துக் காக்கும் என்று தெரிவித்தார்.
உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 17.3.1999 அன்று தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலா
ளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் 15 தனி நல வாரியங்கள் உருவாக்கப்பட்டன.
தவிர அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பதிவு மற்றும் புதுப்பித்தலின் போது வசூலிக்
கப்பட்ட கட்டணங்கள் 1.9.2006 முதல் கருணாநிதியால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
அமைப்பு சாரா தொழிலாளர்களின் சிரமங்களை கருத்தில்
கொண்டு அவர்களுக்கு பதிவு செய்தல் மற்றும் குறிப்பிட்ட புதுப்பித்தல் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு வசதியாக 1. 11. 2008 முதல் மாவட்டம் தோறும் தொழிலாளர் உதவி
ஆணையர் அலுவலகங்கள் தொடங்கப் பட்டது.

  1. 9 .2009 முதல் இணையதளம் வாயிலாக அமைப்பு
    சாரா தொழிலாளர்கள் எளியமுறையில் பதிவு செய்யவும் புதுப்பிக்கவும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு வசதியாகவும் வழிவகைகள் செய்யப்பட்டன.