கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

டெல்லி, பிப்.23
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக, இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடை
வதால், இம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான, இந்திய தேர்தல் ஆணையக் குழுவினர், 5 மாநிலங்களுக்கும் நேரில் சென்று, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையம் நாளை டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது. அதன் பின்னர், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.