கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

43 புதிய அமைச்சர்கள் மோடி தலைமையில் பதவி ஏற்பு! (மத்திய அமைச்சரவை விரிவாக்கம் பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இடம் பிடித்தார்)

டெல்லி, ஜூலை.08
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலை
மையிலான 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர
வையின் பதவியேற்பு விழா நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர்.
புதிய மத்திய அமைச்சரவையில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவார்.
மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்
பட்ட நிலையில், 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலை
மையிலான 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, மத்திய அமைச்சராக பதவியேற்றார்.அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனோவால் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோதிராதித்ய மாதவராவ் சிந்தியா மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராம்சந்திர பிரசாந்த் சிங் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
ராஜஸ்தானை சேர்ந்த மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரி அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
இவர்களுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் மத்திய அமைச்சராக பதவி ஏற்றார்.
புதிய அமைச்சரவை பட்டியல் விவரம்:

  1. ஜோதிர் ஆதித்யா சிந்தியா 2. பூபேந்திர யாதவ் 3. கிரண் ரிஜிஜூ, 4. ஹர்தீப்சிங் பூரி, 5. மன்சுக் மாண்டவியா 6. ஜி.கிஷன் ரெட்டி, 7.மீனாட்சி ஷெணீ 8. அனுராக் தாக்கூர் 9. சர்பானந்த சோனா
    வால், 10. பசுபதிகுமார் பராஸ் 11. அனுப்ரியா படேல் 12. டாக்டர் எல்.முருகன்
    13.ஷோபா கரந்த்லாஜே 14. அஜய் பாட் 15. நாராயன் தாது ராணே, 16. டாக்டர் வீரேந்திர குமார்
  2. ராம்சந்திர பிரசாத் சிங் 18. விஸ்வினி வைஷ்னவ், 19. ராஜ் குமார் சிங் 20. புருஷோத்தம் ரூபாலா 21. பங்கஜ் சவுத்ரி
  3. டாக்டர் சத்ய பால் சிங் பாகேல் 23. ராஜீவ் சந்திரசேகர் 24. பாணு பிரதாப் சிங் வர்மா
  4. தர்ஷன் விக்ரம் ஜார்தோஷ் 26. அன்னபூர்ணா தேவி 27. ஏ.நாராயண்சுவாமி
  5. கவுசால் கிஷோர் 29. பி.எல்.வர்மா 30. அஜெய் குமார், 31. சவுகான் தேவ்சின்ஹா 32. பகவந்த் குபா 33. கபில் மோரீஸ்வர் பாட்டீல், 34. பிரதிமா போமிக் 35. டாக்டர் சுபாஷ் சர்க்கார் 36. டாக்டர் பாகவத் கிஷான்ராவ் காரத்
    37.டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் 38. டாக்டர் பாரதி பிரவின் பவார் 39. பிஷ்வேஸ்வர் துடு
  6. சாந்தணு தாக்கூர் 41. டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாய்,
  7. ஜான் பர்லா, 43. நிஷித் பிரமானிக்.