கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் 4 லட்சத்தை கடந்தது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை! (சிகிச்சையில் 50 ஆயிரம் பேர் மட்டுமே)

சென்னை, செப்.07&
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5783 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோ
னாவால் பாதிக்கப்பட்
டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக உயர்ந்
துள்ளது.
தமிழத்தில் கொரோனா
ஊரடங்கில் பல்வேறு
தளர்வுகள் அறிவிக்கப்
பட்டுள்ளது. கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டாதாகவே சூழ்நிலை உணர்த்துகிறது. மக்கள்
வழக்கமான வேலை
களில் ஈடுபட தொடங்கி
விட்டனர்.
எனினும் சமூக இடை
வெளி பெரிய அளவில் பின்பற்றும் சூழல் எங்கும் நிலை. இருப்பினும் கொரோனா பாதிப்பு தமிழத்தில் நிலையான அளவிலேயே உள்ளது. 6000 என்கிற அளவிலேயே உள்ளது. தொற்று பாதிப்பு
எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும். உயிரி
ழப்பு எண்ணிக்கை குறை
வாகவே உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5783 பேருக்கு
தொற்று உறுதி செய்யப்
பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்
பட்டவர்களின் எண்
ணிக்கை 4,63,480 ஆக
உயர்ந்துள்ளது.தமிழ
கத்தில் கொரோனா தொற்
றில் இருந்து நேற்று
5,820 பேர் மீண்டுள்ளனர்.
இதனால் கொரோனா
வில் இருந்து குணமடைந்
தோர் எண்ணிக்கை 4,04,186 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் உயிரிழந்
தோரின் எண்ணிக்கை 7,836 ஆக அதிகரித்துள்ளது. அதிபட்சமாக சென்னை
யில் 17 பேரும், கோவை
யில் மற்றும் கடலூரில் தலா 5 பேரும், சேலத்தில் 6 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், திருப்பூரில் 4 பேரும் பலியாகி உள்ளனர்.
வேலூர், செங்கல்
பட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். விழுப்புரம், திருநெல்வேலி உள்பட 7 மாவட்டங்களில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிகமாக 2862 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று
84,034 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ
கத்தில் இதுவரை 51,26,231
பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்
டுள்ளது.
தமிழத்தில் கொரோனா பாதித்தவர்களில் 4,04,186
பேர் டிஸ்சார்ஜ் செய்யப்
பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 51,458 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.
மாவட்ட நிலவரம் என்று பார்த்தால் சென்
னையில் கொரோனாவால் நேற்று 955 பேர் பாதிக்கப்
பட்டுளளனர்.சென்னை
யில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 141654 ஆக உயர்ந்துள்ளது.
சென்னைக்கு அடுத்த
படியாக கோவையில் 538 பேரும், கடலூரில் 388 பேரும், செங்கல்பட்டில் 361 பேரும் பாதிக்கப்
பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை யில் 272 பேரும், திருவள்ளூரில் 246 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.