கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

‘21 வயதில் 100 விக்கெட்டுகள்’ அசத்தும் சோஃபி எக்லஸ்டோன்

இங்கிலாந்து, பிப்.25
21 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 101 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் சோஃபி எக்லஸ்டோன்.
இங்கிலாந்து – நியூசிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
179 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் டமி பீமாண்ட் 71 ரன்களையும், ஹேதர் நைட் 67 ரன்களையும் அடித்தனர்.
இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லஸ்டோன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்துள்ளார். அவருக்கு வயது வெறும் 21 தான்.
டெஸ்ட் போட்டிகளில் 6 விக்கெட்டுகள், ஒரு நாள் போட்டிகளில் 39 விக்கெட்டுகள், டி 20 போட்டியில் 56 விக்கெட்டுகள் என மொத்தம் 101 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் சோஃபி எக்லஸ்டோன்.