ஜப்பான், பிப்.25
ஜப்பானில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்கொலைகள் அதிகரிக்கும்சூழலில்அவற்றை தடுப்பதற்கு தனிமைத்துறை என ஒரு துறை உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சரை நியமித்ததுள்ளது ஜப்பான் அரசு
தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டான நாடாக
ஜப்பானை குறிப்பிடுவார்கள். எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் தன்னைத்தானே மெருகேற்றி முன்னேறும் நாட்டில் நேற்று தற்கொலை அதிகரித்து வருவதுதான் வேதனை.
கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான தற்கொலைகள் கடந்த ஆண்டு ஜப்பானில் பதிவாகியுள்ளது. கடந்த அக்டோபர் வரையிலான கணக்குப்படி கொரோனா இறப்பைவிடவும் தற்கொலையின் உயிரிழப்புகள் அதிகரித்தது அந்நாட்டு அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஜப்பான் நாட்டின் ஊடகம் வெளியிட்ட விவரத்தின்படி கடந்த ஆண்டு 20919 பேர் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்வதாக கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஜப்பான் அரசு. தற்போது முதற்கட்ட நடவடிக்கையாக தற்கொலையை தடுக்கவும், மக்களின் தனிமையை குறைக்கவும் தனி அமைச்சரவையையே உருவாக்கியுள்ளது ஜப்பான் அரசு.
டெட்சுஷி சகமோட்டோவை அமைச்சராகவும் நியமித்துள்ளது.
சமூகத்தில் இருந்து விலகி தனிமையில் வாடும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு மனதளவில் உத்வேகத்தை அளிக்கும் வேலையில் நிச்சயம் புதிய அமைச்சரவை ஈடுபடும் என ஜப்பான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.