கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

2 வருட எம்.பி.கள் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம் தமிழக எதிர்கட்சிகள் ஒப்பாரி வைப்பது ஏன்?


சென்னை, ஏப்.09&
எம்பிக்களின் நிதி இரண்டு வருசத்துக்கு ரத்து என்று அறிவித்தவுடன் நாட்டில் வேறு எங்கும் எதிர்ப்பு இல்லை.ஆனால் தமிழ்நாட்டில் தான் ஐயோ போச்சே ஐயோ போச்சேன்னு கத்த ஆரம்பித்து இருக்கி றார்கள்.
லோக்சபா ராஜ்ய சபா என்று மொத்த மாக 387 எம்பிக்களை வைத்து இருக்கும்
மிகப்பெரிய கட்சியான பிஜேபி இந்த எம்பிக்களின் நிதியை பற்றி கவலைப்ப டாமல் தன்னுடைய ஆட்சியிலேயே அதை
ரத்து செய்து இருப்பதன் மூலமாக தேச
மே தெய்வம் என்று நிரூபித்து விட்டது.
ஆனால் இரண்டு மூன்று எம்பிக்களை வைத்து ஆனால் அல்லு சில்லு கட்சிகள் இந்த எம்பி நிதியை மத்திய அரசு ரத்து
செய்தற்காக கதறிக்கொண்டு இருக்கின்றன
பின்னே இருக்காதா..2 வருசத்துக்கு 10
கோடி ரூபாய் அல்லவா.. நரசிம்மராவ்
பிரதமராக இருந்த பொழுது தான் இந்த
எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி நடை முறைக்கு வந்தது. 1993-1994 கால த்தில் அமலுக்கு வந்த பொழுது வருசத்துக்கு 25 லட்சமாக இருந்து படிப்படியாக உயர்ந்து 2012 ல் காங்கிரஸ் ஆட்சியில் வருசத்துக்கு 5 கோடியாக உயர்ந்தது.
நிறைய சிறிய கட்சிகள் இந்த எம்பிக்க ளின் தொகுதி மேம்பாட்டு நிதியை
வைத்து தான் கட்சியை நடத்தி வருகின்றன. திருமாவளவன் இதை வச்சே இன்னும்10 வருசத்துக்கு கட்சியை ஓட்டி விடலாம் என்று கனவுடன் இருந்தார்.
திமுகவும் பாவம் எல்லாம் போச்சேன்னு
ஒப்பாரி வைக்கிறார்கள் சும்மாவா 24
எம்பிக்கள் மூலமாக 240 கோடி ரூபாய்
அல்லவா.. வருத்தம் இருக்கத்தான் செய்
யும்.கார்த்திக் சிதம்பரத்துக்கு இதெல்லாம்
பாக்கெட் மணி தான். இருந்தாலும்
இழக்க மனசில்லை.
தொகுதி மேம்பாட்டு நிதியில் இவர்கள்
என்ன கிழிக்கிறார்கள்..என்ன கிழித்து
இருக்கிறார்கள்.சும்மா பெயருக்கு
ஆள்கள் வராத ஊர்களில் பஸ் நிற்காத இடங்களில் ஒரு கட்டிடத்தை கட்டி விட்டு
பல லட்சங்களுக்கு பில் போட்டு மக்கள்
பணத்தை சுருட்டி வருகிறார்கள்.
ஆடு மாடுகள் மட்டுமே அந்த பயணிகள் இருப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றன உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நிதி எம்எல்ஏக்களுக்கு நிதி எம்பிக்களுக்கு
நிதி என்று மக்கள் பணத்தை இந்த.
மக்கள் பிரதிநிதிகள் சூறையாடி வருகிறார்கள்
ஒவ்வொரு முறையும் இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறி க்கையில் இந்த எம்பிக்களின் தொகுதி
மேம்பாட்டு நிதியில் மிகப்பெரிய அளவில்
மோசடி நடைபெறுகிறது என்றே
குறிப்பிட்டு வருகிறார்கள்.
நிறைய எம்பிக்கள் தங்களுடைய குடும்ப
உறுப்பினர்கள் உருவாக்கி உள்ள அறக்
கட்டளைகளுக்கு அவர்களின் கட்சிகள் சார்ந்த அமைப்புகளின் மூலமாக ஏதோ பெயருக்கு வேலையை பார்ர்த்து விட்டு தொகுதி மேம்பாட்டு நிதியை சுருட்டிக்
கொள்கிறார்கள்.
இந்த நிதியை பயன்படுத்துவதில்
வெளிப்படைத்தன்மை இல்லாததால் இந்த
எம்பிக்கள் நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் தரம் இல்லை என்றும்
பலமுறை சிஏஜி ரிப்போர்ட் கூறி
உள்ளது
இப்பொழுது கொரானா தடுப்பு நிதிக்கு எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி
திருப்பப்பட்டுள்ளதால் இது வரை ஆடு
மாடுகள் மட்டுமே ஓய்வு எடுக்க பயன் பட்டு வந்த மக்களின் பணத்தை முதல் முறையாக மக்களுக்கு பயன்படுத்த இருக்கிறார்கள்.
எம்பிக்கள் ஆட்டைய போட்டு வந்த
பணத்தில் இருந்து சுமார் 8000 கோடி ரூபாய் பணத்தை எடுத்து மக்கள் நல பணிக்கு
கொண்டு வந்துள்ளார் மோடி. 26
ஆண்டுகளுக்கு பிறகு எம்பிக்களின் விறிலிகிஞிஷி நிதி உண்மையிலேயே மக்களுக்கு
இப்பொழுது தான் பயன்பட இருக்கிறது.
வாழ்த்துகள் மோடி ஜி

Leave a Reply