கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

187 தொகுதிகளில் தி.மு.க. போட்டி! (தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் சூப்பர் பிளான்)

சென்னை, மார்ச்.09
கடந்த சட்டமன்ற தி.மு.க. கூட்டணியில் தேர்தலில் ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் இந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார்.
அதனால் இந்த தேர்தலில் புதிய வியூகம் அமைத்தார். முடிந்தவரை கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கிவிட்டு திமுக வேட்பாளர்களை அதிக இடங்களில் களமிறக்க திட்டமிட்டார்.
அதனால் தான் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐயூஎம்எல் 3, மமக 2, விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக தலா 6, காங்கிரஸ் கட்சிக்கு 25
தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 54 தொகுதிகள். இதில் மதிமுக 6 தொகுதி
களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. மமக ஒரு இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி இரண்டு தலா ஒரு தொகுதிகள் பெற்று உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 187 இடங்களில் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த முறை திமுக கூடுதலான தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்று இருக்கும். அதனால் இந்த முறை அதே தவறு நடந்துவிட கூடாது என்பதற்காக கறாராக இருந்து தொகுதி பங்கீட்டை முடித்துள்ளதன் மூலம் தமிழக ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் ஆப்பர் பிளான் போட்டுவிட்டதாக அரசியல் நோ’கர்கள் கூறுகிறார்கள்.