கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

101 பேர் கைது-105 கோடி ரூபாய் மீட்பு அதிரவைக்கும் பிரதமர் கிஷான் திட்ட முறைகேடு

டெல்லி, அக்.17
தமிழகத்தில், பிரதம மந்திரி கிஷான் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு செய்த 101 பேரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார், அவர்களிடம் இருந்து 105 கோடி ரூபாயை மீட்டுள்ளனர்.
மத்திய அரசின் பிரதமர் மந்திரி கிஷான் நிதியுதவித் திட்டம் மூலம் நாட்டில் உள்ள தகுதிபடைத்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படி, தகுதியான விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு நிதியுதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மத்திய அரசின் பிரதமர் மந்திரி கிஷான் நிதியுதவித் திட்டத்தை அதிகாரிகள் துணையுடன் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டனர். விவசாயிகள் அல்லாத பலர் இந்த நிதியை முறைகேடாக பெற்றனர். இந்த சம்பவம் முதன்முதலாக கடலூர் மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து, இந்த திட்டத்தில் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல்லை சிலர் பயன்படுத்தி சுமார் 110 கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த 10 குழுக்களை தமிழக அரசு அமைத்தது. பின்னர் களத்தில் இறங்கிய சிபிசிஐடி போலீசார் பலரை கைது செய்தனர். மோசடியில் ஈடுபட்ட 80-க்கும் அதிகமானோர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மோசடியில் ஈடுபட்டவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, களத்தில் குதித்த சிபிசிஐடி போலீசார், மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி, விவசாயிகள் பெயரில் மோசடியில் ஈடுபட்ட 101 பேரை கைது செய்தனர். மேலும், விவசாயிகள் பெயரில் மோசடியாக பெற்ற 105 கோடியை மீட்டுள்ளனர். விசாயிகள் பெயரில் மோசடி செய்த பணத்தை குற்றவாளிகளிடம் இருந்து நேரடியாக மீட்பது நாட்டில் இதுவே முதல்முறை ஆகும்.