கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

6-வது நாளாக 1000த்தை தாண்டிய தமிழகத்தில் கொரோனா பாதிப்பு! (பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியது)

சென்னை, ஜுன்.06&
தமிழகத்தில் நேற்று, ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று புதிதாக
1,116 பேருக்கு கொரோனா
உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை நிருபர்
களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாநிலத்தில்
மொத்த பாதிப்பு எண்
ணிக்கை 27,256ல்
இருந்து 28,694 ஆக உயர்ந்
துள்ளது.அதிகமான தொற்று பாதிப்பை கண்டறியும் விதமாக,
அதிகமான பரிசோதனை
களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், அதை செய்துள்ளது தமிழக அரசு. தினமும் சராசரியாக 12 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுவந்த நிலையில், நேற்று அதிக
பட்சமாக 16 ஆயிரத்துக்
கும் அதிகமான பரிசோ
தனைகள் செய்யப்
பட்டநிலையில், நேற்று
15,692 பரிசோதனைகள் செய்யப்பட்டன.
நேற்று 15,692 பரிசோ
தனை செய்யப்பட்டதில், 1,438 பேருக்கு தொற்று
உறுதியாகியுள்ளது.எனவே பாதிப்பு எண்
ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் தொடர்ச்சியாக 3வது நாளாக நேற்றும் ஆயிரத்
துக்கும் அதிகமான பாதிப்பு பதிவாகியுள்ளது.
நேற்று சென்னையில் 1,116 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னை
யில் பாதிப்பு எண்
ணிக்கை 19,809ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மொத்த பாதிப்பு 8,885ஆக
உள்ளது. நேற்று ஒரே
நாளில் 861 பேர் கொரோ
னாவிலிருந்து குணமடைந்து
டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதை
யடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 15,762ஆக அதிகரித்துள்ளது.
12,697 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நேற்று 12 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 232ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 30
தனியார் மருத்துவமனை
களில் இணைத்து ஒரு போர்ட்டல் கொண்டு உரு
வாக்கப்படுகிறது விரைவில் இந்தப் போர்ட்டல் மூலம்
ஒவ்வொரு மருத்துவ
மனையிலும் எத்தனை வெற்றிகள் இருக்கிறது என்ன வசதிகள் இருப்பது என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படும் முதலமைச்சர் இதற்
கான நடவடிக்கை எடுத்துள்ளார்.
கை சுகாதாரம், மேற்
பரப்பு சுகாதாரம் ஆகிய
வற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பால்தான் இந்த பிரச்சினையை வெல்ல முடியும். வயது முதிர்ந்தவர்கள் செய்ய வேண்டியது என்ன, செய்ய கூடாதது என்ன என்பது குறித்தெல்லாம் நாங்கள் அறிவிக்கிறோம். மக்கள் அதை பின்பற்ற வேண்டும். இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.