கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் குளறுபடி அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

கோபி, ஜூன்.20&
10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள்பட்டியலில் குளறுபடி செய்யும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோபி அருகில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் பகுதியில் அதிக அளவில் கிணறு பாசனம் மூலம் விவசாயம் செய்யப்படுகிறது. எனவே அணையில் இருந்து தண்ணீர் வெளியே செல்லும் பகுதியில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என்பதற்காக 2 இடங்களில் ரூ.5.82 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும்பணி நடந்து வருகிறது.
இதில் ஒரு தடுப்பணை 2 மீட்டர் உயரத்திலும், மற்றொரு தடுப்பணை 1.5 மீட்டர் உயரத்திலும் கட்டப்படுகிறது. 2 மீட்டர் உயரம் கொண்ட தடுப்பணை கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் கசிவு நீர் வெளி«Òஜீ குண்டேரிப்பள்ளம்ஓடையில் வந்து தடுப்பணை நிரம்பி உள்ளது. இதை நேற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழக முதல் அமைச்சர் விவசாயிகளின் நலன் கருதி கடந்த 2 ஆண்டுகளாக குடிமராமத்து பணிகளை நிறைவேற்றி வருகிறார். அதன்அடிப்படையில், குண்டேரிப்பள்ளம் அணையில்கூடுதலாக தண்ணீர் தேக்கும் வகையில் அணையின் உயரத்தை 3 அடி உயர்த்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், 5.94 கோடி மதிப்பில் 2 தடுப்பணைகள் கட்டப்படுகிறது. மேலும் புதிதாக ஒரு தடுப்பணை கட்டுவதற்கும் முதல் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக கட்டப்படும் தடுப்பணையின் மூலம் 4 கிலோ மீடடர் தூரத்திற்கு நீர் மட்டம் உயருகிறது. இதைப்போன்று, பவானி ஆற்றிலும் 4 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கும் ஆய்வு பணி முடிந்து, மதிப்பீடு தயாரிக்கப்பட்டு முதல் அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. 4 தடுப்பணையின் மூலம் சுற்றுப்புறப்பகுதியில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர் மட்டம் உயரும்.
அத்திக்கடவு அவினாசி திட்டம் ரூ.1645 கோடி செலவில் மாநில அரசே ஏற்று பணி நடந்து வருகிறது. இதில் வறட்சியாக உள்ள 4 தொகுதிகள் பயன்அடையும். வினோபா பூமிதான இயக்க நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக முதல் கட்டமாக 91 பேருக்கு வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 46 பேருக்கு விரைவில் வழங்கப்படும். விவசாய நிலத்திற்கு பட்டா வழங்க தடையில்லா சான்றிதழ் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கோபி சட்டமன்ற தொகுதியில் இது வரை 7 பெரிய குளங்கள், ஊராட்சி பகுதியில் இது வரை 18 குளங்கள் சீர் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 10 குளங்கள் சீரமைப்பு செய்ய பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் பள்ளிக்கல்வித்துறையிடம் உள்ளது. எனவே மதிப்பெண்கள் பட்டியல் தயாரிக்கும் போது குளறுபடி செய்யும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதிப்பெண்கள் பட்டியல் தயாரிக்கும் போது உள்ள குறைகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
அப்போது, கோபி ஆர்.டி.ஓ.ஜெயராமன், தாசில்தார் சிவசங்கர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவி பொறியாளர் கல்பணா, முன்னாள் சிட்கோ வாரியத்தலைவர் சிந்துரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தம்பி என்கிற சுப்பிரமணியம், மனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.