கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

சசிகலாவுக்கு ரூ.10.1 கோடி கட்டிய 4 பேர் பரபரப்பு பின்னணி விவரம்

சென்னை, நவ.20
தனக்கு நீதிமன்றத் தில் அபராதபணம் கட்ட உதவி செய்த தனது உறவினர்கள் 4 பேருக்கு முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா நன்றி தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா
விற்கு ரூ. 10.1 கோடி அபராதம்விதித்து நீதிமன்றம் உத்தர
விட்டது. சசிகலா சிறையில் உள்ளதால், அவ்வளவு பெரிய தொகையை தன்னால் திரட்ட முடியாது என்பதால், உறவினர்களிடம் உதவி கேட்டுள்ளார்.
அவர்களும் கேட்ட பணத்தை, பழனிவேல், வசந்தா தேவி, ஹேமா, விவேக் ஆகிய 4 பேர் கொடுத்து உதவி செய்துள்ளனர்.
அவ்வாறு கிடைத்த பணத்தை சசிகலாவின் வழக்கறிஞர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்திவிட்டார்.
இதன் மூலம் சசிகலா வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கான அபராத தொகை கொடுத்து உதவிய 4 பேரில், பழனிவேல் சசிகலாவின் மைத்துனர், வசந்தா
தேவி பழனிவேலின் மனைவி, ஹேமா டாக்டர் வெங்க
டேசின் மனைவி, விவேக் இளவரசியின் மகன் ஆவார்.
இதில் ஜெயா டிவியின் சிஇஓ-வாக விவேக் உள்ளார்.
என்ன இருந்தாலும், “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்“ என பெரியவர்கள் சும்மா சொல்லி வைத்தனர்.
ஆபத்தான நேரத்தில் உறவினர்கள் தானே முன்வந்து உதவி செய்கின்றனர்.