கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

மதுரை ஒத்தக்கடை ஊராட்சி பகுதியில் சுகாதார சீர்கேடு கிருமிநாசினி கூட தெளிப்பல்லை -பொதுமக்கள் கொந்தளிப்பு

மதுரை, ஏப்.08&
மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வினய் அவர்களின் உத்தரவின் பேரில் கோரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மேற்பார்வையில் ஊராட்சிகள் தோறும் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது மேலும் ஊராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருக்கும்படி ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் ஒத்தக்கடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக எந்த பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட வில்லை என்றும் இதனால் ஒத்தக்கடை பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் மேலும் ஒத்தக்கடை மெயின்ரோட்டில் இரு பகுதிகளிலும் ஆங்காங்கே குப்பைகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன அப்பகுதியில் பிளிச்சிங் பவுடர் கூட போடுவதில்லை,இதேபோல் ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது ஊராட்சி நிர்வாகத்தினர் அனைத்து பகுதிகளிலும் முறையாக கிருமிநாசினி தெளிக்கப்படவில்லை ஏதாவது ஒரு பகுதியில் மட்டும் தெளித்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.
பிளீச்சிங் பவுடர் கூட தெருக்களில் போடுவது கிடையாது குப்பைகளையும் முறையாக அகற்றுவதில்லை இதனால் இப்பகுதியில் கடும் சுகாதாரக்கேடு நிலவுகிறது என்கின்றனர் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் ஒத்தக்கடை மட்டுமின்றி பல்வேறு ஊராட்சிகளிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மந்த நிலையிலேயே நடைபெறுகின்றது எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முறையாக ஆய்வு மேற்கொள்வதில்லை குறிப்பாக கிழக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலுவலகத்திலும் இருப்பதில்லை ஊரக பகுதிகளில் ஆய்வு செய்வதும் இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் ஒத்தக்கடை ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் இல்லாத காலகட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் லட்சக்கணக்கில் முறைகேடுகள் நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. மேலும் 2018-2019 ஆம் நிதியாண்டில் நடைபெற்ற திட்டப் பணிகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கூறப்படுகின்றன. இதேபோல் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் பல ஊராட்சிகளில் நிதி! முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply