கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 690 ஆனது! (பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு 19 பேர் குணமடைந்துள்ளதாக தகவல்)

சென்னை, ஏப்.08&
சீனாவில் இருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 336 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்துவருகின்றா தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது :
தமிழ்நாட்டில் நேற்று மேலும் 690 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. எனவே தமிழ்நாட்டில் மொத்தம் 690 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 19 பேர் கொரோனாவில் இருந்து மீட்கபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6-ல் இருந்து 7-ஆக அதிகரித்துள்ளது. சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்த 64 வயது பெண் ஒருவர் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் ஏற்கனவே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்மணி தொடர்பான பயண வரலாறு விசாரனை செய்யப்படுகிறது.
நேற்று பாதிக்கப்பட்ட 690 பேரில் 63 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply