கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது? (பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி)

சென்னை, ஏப்.16&
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று 38 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைதடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1204 ஆக நேற்று மாலை நிலவரப்படி உயர்ந்தது
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் நேற்றைய நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடுத்து வருகிறார், உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை அறிவுரைகளையும் வழங்கி வருகிறார் முதல்வர்.
” 17835 பேருக்கு இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. 2739 பேருக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 38 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது.. நேற்று ஒரே நாளில் 37 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது” என்றார்.
இன்றைக்கு கூடுதலாக ஒரு லேப் ஒப்புதல் கிடைத்துள்ளது மொத்தம் 26 இந்தியாவிலேயே அதிக லேப் உள்ளது தமிழகத்தில் தான் 270 அரசு லேப் 100தனியார் லேப் பரிசோதனை மேற்கொள்ள 5320 மேற்கொள்ள இயலும்.
ஜனவரி 22அன்று 146கோடி நிதி ஒதுக்கி மருந்து தயார் நிலையில் வைத்திருந்ததால் கட்டுக்குள் வைத்துள்ளோம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முககவசங்களை வாங்கி வைத்து விட்டோம் . 204 கோடி 85லட்சத்திற்கு கொள்முதல் செய்து மூன்றடுக்கு முக கவசம் , என்95 முககவசம்,சுய பாதுகாப்பு கவசங்களுக்கு தடையில்லாத அளவிற்கு கொடுத்து வருகிறோம் இது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பதிலாக கூறுகிறேன்.
பிபிஇ , என்95 முக கவசங்கள் நம்மிடம் போதுமான அளவு உள்ளது, இன்று பிறந்த குழந்தைக்கு நோய் தொற்று இல்லாத நிலையில் தான் தமிழகம் உள்ளது. தஞ்சை அரசு மருத்துவமனையில் தொற்று உள்ளவருக்கு பிறந்த குழந்தை க்கு நோய் தொற்று இல்லாத நிலையில் கண்காணித்து வருகிறார் கள், ஒன்றரை லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் நம்மிடம் உள்ளது, இந்தியாவிலேயே அதிகப்படியான லேப் தமிழகத்திலுள்ளது.
ஆர்டி பிசிஆர் கிட் போதுமான அளவில் தமிழகத்தில் உள்ளது, அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகிறது, 300க்கும் மேற்பட்ட உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவித்து அவர்கள் முன் வந்து தயாரித்து வருகிறார்கள், பொதுசுகாதரத்துறை தமிழகத்தில் சிறப்பாக உள்ளது,
சமூக தொற்று இல்லையென்ற பாதுகாப்பான நிலையை உறுதிப்படுத்தியுள்ளோம்.
மருத்துவர்கள் உள்ளார்ந்த உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள் செவிலியர்கள் தாமாக முன்வந்து கொரோனா வார்ட்டில் பணி கேட்கிறார்கள் அவர்களை முதல்வரின் சார்பிலும் துறையின் சார்பிலும் பாராட்டுகிறோம்.
அரசின் தலையாகிய கடமை களத்தில் பணயற்றுவர்களின் பாதுகாப்பு தான் அவர்களின் பாதுகாப்பு உணவு உள்ளிட்டவை மிக முக்கியம் என்பது தான்.
ஒரு மாவட்டத்தில் 15 பாதிப்புகளுக்கு மேல் இருந்தால் அதனை ஹாட் ஸ்பாட் என்கிறார்கள்.
விழுப்புரத்தில் இருந்து தப்பியவர் செங்கல்பட்டு அருகில் பிடிப்பட்டார் அவருக்கு உரிய பாதுகாப்பு கவசங்களுடன் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார் அதற்கு முன் அவர் எங்கெல்லாம் சென்றார் என்பதை காவல்துறையும் வருவாய்துறையும் செய்து வருகிறார்கள்.
முதல்வரின் ஆணைக்கினங்க பல்வேறு மருத்துவமனையில் ஆய்வு செய்வதால் பணிகளின் காரணமாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை இதில் வேறு சிந்தனைக்கு இடமில்லை அதிகாரப்பூர்வ தகவல்களை செயலர் வெளியிடுகிறார்கள்.