கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் ஒரே நாளில் 5458 பேருக்கு கொரோனா டெஸ்ட்! (சென்னையில் 55 உள்பட 76 பேருக்கு நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 635 ஆக உயர்வு)

சென்னை, ஏப். 22& தமிழத்தில் நேற்று ஒரே நாளில் 5458 பேருக்கு கேரோனா டெஸட் செய்யப்பட்டது அதில் 76 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 55 பேர். குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் தினமும் பாதிக்கப் பட்டு வரும் நிலையில் நேற்று மட்டும் சென்னையில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 1596 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 76 பேர்களில் சென்னையை சேர்ந்த வர்கள் 55 பேர் என்றும் அவர்கள் 26 பேர் பத்திரிக்கையாளர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தமிழகத்தில் நேற்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், தமிழகத்தில் மொத்தம் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ கத்தில் கொரோனா தொற்றில் இருந்து நேற்று 178 பேர் குணமாகி உள்ளதால் தமிழகத்தின் மொத்த குணமாணவர்களின் எண்ணிக்கை 635 வேண்டும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வந்த போதிலும் கொரோனாவால் தினமும் 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மட்டும் சென்னையில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள் ளனர். இதைத் தொடர்ந்து, தென்காசியில் 5 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், செங்கல்பட்டு, தஞ்சையில் தலா 3 பேரும் பாதிக்கப்பட்டுள் ளனர். இதன் மூலம், தமிழகத்தில் அதிகபட்சமாக பாதிக் கப்பட்ட மாவட்டமாக சென்னை நீடித்து வருகிறது.
சென்னையில் 358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள் ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 134 பேரும், திருப்பூரில் 109 பேரும், திண்டுக்கல்லில் 76 பேரும், ஈரோட்டில் 70 பேரும், நெல்லையில் 62 பேரும், செங்கல்பட்டில் 56 பேரும், நாமக்கல் 51 பேரும், திருச்சியில் 50 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.