கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

டாக்டர் சைமனின் மரணம் அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்

சென்னை, ஏப்.23&
கொரோனாவால் உயிரிழந்த சென்னை டாக்டர் சைமனின் சடலத்
துக்கு நடந்த கொடுமைதான் தேசத்தையே உலுக்கி
யிருக்கிறது. சமூக வலைதளங்கள் எங்கும் அவருக்கான இரங்கல் பதிவுகளும், அவரது பிரேதத்தை அவமரியாதை செய்தவர்களுக்கு எதிரான தூற்றல் பதிவுகளுமாய் பொங்கி வழிகின்றன.
இந்த சூழலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்
சரான டாக்டர் விஜய பாஸ்கரும் சைமனின் இறப்புக்காக உச்சகட்ட
மரியாதை தெரிவித்துள்ளார். ‘கொரோனா எனும் கொடிய வைரஸை நேரடியாக எதிர்த்து போரிடுபவர்கள் மருத்துவர்களும், மருத்துவ துறை பணியாளர்களும்தான்.
ஒரு டாக்டரின் மரணத்துக்காக சக டாக்டராக நான் கண்ணீர் விடுகிறேன். போர்க்களம் சென்றால் சாவும் நேரலாம் என்று தெரிந்தே செல்லும் வீரர்கள் போலத்தானே டாக்டர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செல்கின்றார்கள்.
சக மனுஷனின் உயிரை
காப்பாற்ற போராடும் டாக்டர் இறந்த பின், அவரது உடலை அடக்கம்
செய்யக்கூட அனுமதிக்க மாட்டேன் என்பது எப்படி? நானும் கொரோனா வார்டு களுக்கு சென்று, பார்வை யிட்டும், ஆய்வு செய்தும், தமிழக முதல்வர் அடிக்கடி கேட்கும்தகவல்களை வழங்கி, சுகாதாரத் துறைக்காக முதல்வரிடமி ருந்து தேவையான வசதிகளைப் பெற்றும் இந்த நோய்க்கு எதிராக போராடுகிறேன்.
ஒன்றை நல்லா புரிஞ்சுக்குங்க, கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதால் காற்றி
லெல்லாம் வைரஸ் பரவாது. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு தல் படிதான் உடல்கள் அடக்கம் செய்யப்படு கின்றன.
நோய்த் தொற்று உரு வாகலாம் என தெரிந்தே களமிறங்கும் போர்
வீரர்கள் இவர்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவரான சைமனின் உடலை புதைக்க விடாமல் பொதுமக்கள் சிலர் எதிர்த்து, பிரச்னை செய்தனர். இது கடும் கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்