கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கொரோனா போரில் களத்தில் இறங்கி பணியாற்றிவரும் மருத்துவர்களின் அர்பணிப்பிற்கு மரியாதையளிக்கவேண்டும் (முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை)

சென்னை, ஏப். 22&
கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் இறங்கி பணியாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் யாரும் பயப்பட வேண்டாம், அரசு உங்கள் பக்கம் நிற்கும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியா
தையளித்து மனிதநேயத்
துடன் நடந்து கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பலியான மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் மற்றும் வன்முறையில் இறங்கியது அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மனதளவில் சோர்வுற்றனர். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:
“மனித குலத்திற்கே சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் மற்றும் வருவாய்த் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினைச் சார்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தையே மறந்து, தன்னலம் கருதாமல் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு உயிரும் இந்த அரசுக்கு முக்கியம் என்று கருதி, இந்த அரசு செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. எனவே, களத்தில் முன்னின்று பணியாற்றும் களப் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை நான் ஏற்கனவே அறிவித்து இருந்தேன். இவர்களது பணியினை நாடே போற்றி, நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்களை, இறைவனுக்கு நிகராக நான் கருதுகின்றேன்.
கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின் உடல்களை, உரிய பாதுகாப்பு நெறிமுறை களை கடைபிடித்து தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், மருத்துவப் பணியில் ஈடுபட்டு, நோய்த் தொற்றுக்கு ஆளாகி, தங்கள் இன்னுயிரை ஈர்ந்த
வர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற ஓரிரு சம்பவங்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் அளிக் கின்றது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள் கிறேன்.
‘’பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது”
என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, தன்னலம் கருதாமல், மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு, தங்கள் இன்னுயிரைத் துறப்பவர்களுக்கு, தகுந்த மரியாதை அளிக்கும் விதத்தில், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, தக்க பாதுகாப்பு நடவடிக் கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும் எனவும், மருத்துவர்கள் மற்றும் பிற களப் பணியாளர்கள் அச்சப்படத் தேவை யில்லை எனவும், அரசு உங்கள் பக்கம் முழுமை யாக நிற்கும் என்பதையும் இத்தருணத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்”