கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கொரோனாவால் தமிழகத்தில் 3 நாட்களாக உயிரிழப்பு இல்லை! ( 23 மாவட்டங்களில் புதிய நோயாளிகள் இல்லை 411 பேரை விரைவாக குணப்படுத்தி இந்திய அளவில் முதலிடம் )

சென்னை, ஏப். 20&
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு எதுவும் இல்லை.
மேலும் தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 46 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நபர்களை விட தினமும் டிஸ்சார்ஜ் ஆகும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது.
ஆனால் ராபிட் கிட் சோதனை கருவிகள் மூலம் விரைவாக சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 50 பேருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூரில் நேற்று 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தம் 46 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது.
கோவையில் நேற்று 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோர் 133 பேராக அதிகரித்துள்ளது.
அதேபோல திண்டுக்கல்லில் 5 பேருக்கும் ( மொத்தம் 74 பேர்). திருநெல்வேலியில் 2 பேருக்கும் (மொத்தம் 62 பேர்). செங்கல்பட்டில் 3 பேருக்கும் (மொத்தம் 53 பேர்). மதுரையில் 2 பேருக்கும் (மொத்தம் 46 பேர்). விழுப்புரத்தில் 7 பேருக்கும் (மொத்தம் 33 பேர்). நாகப்பட்டினத்தில் 3 பேருக்கும் ( மொத்தம் 43 பேர்). கடலூரில் 6 பேருக்கும் (மொத்தம் 26 பேர்). திருவாரூரில் 5 பேருக்கும் ( மொத்தம் 26 பேர்). தென்காசியில் 4 பேருக்கும் (மொத்தம் 22 பேர்). விருதுநகரில் 2 பேருக்கும் ( மொத்தம் 19 பேர்) கொரோனா ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டது. அங்கு மொத்தம் 9 பேருக்கு கொரோனா உள்ளது. நேற்று மட்டும் 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு எதுவும் இல்லை. மேலும் தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 46 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 411 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தம் தமிழகம் மற்ற மாநிலங்களை விட கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் வேகமாக செயல்பட்டுவருகிறது. ஆகவே கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது.
மற்றொரு நல்ல அறிகுறியாக தமிழகத்தில் 23 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரியில் எந்தக் கேஸ§ம் இதுவரை இல்லை. திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, திருவள்ளூர், தேனி, கரூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, சேலம், வேலூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று புதிய கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை என்பது மகிழ்ச்சியான விசயம் தானே.